தமிழ்
ஸ்ரீ கருடர்
ஸ்ரீ கருடர் என்னும் பறவை ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்  பெரிய திருவடியாக இருக்கிறார்.பக்ஷி தோஷம்
மற்றும்  நாக தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீ கருட மூர்த்தியை வணங்கினால் கோரிக்கை உடனடியாக
நிறைவேறும், கருப்பு மிளகும் ,உப்பும் அவருக்கு பிடிக்கும் . எனவே வெண்பொங்கல் செய்து அவரை
வழிபடுவது நலம் . நாச்சியார் தேவிகளாக  ஸ்ரீ ருத்ரை மற்றும் ஸ்ரீ சுகீர்த்தி உடன் உள்ளனர் .
ஸ்ரீ வராஹர்
ஸ்ரீ வராஹவதாரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஸ்ரீ பூமாதேவியை காக்க எடுக்கப்பட்டதாகும். முன்னொரு
சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் ஸ்ரீ பூமாதேவியை  அபஹரிக்க வந்ததால் , ஸ்ரீ
மஹாவிஷ்ணுவிடம் தஞ்சம்புகுந்தாள் ஸ்ரீ பூமாதேவி. ஹிரண்யாக்ஷனை வதம் செய்து ஸ்ரீ பூமாதேவியை
காத்தார். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள்,கண் திருஷ்டி  மற்றும் பிறர்  பொருள்மீது மோகம்
கொள்பவர்கள் ஆகியோர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை  வழிபடுவது சிறந்தது. வெல்லம்,
கோரைகிழங்கு ஆகியவை  இவருக்கு பிரசாதம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் உடன் இருந்து ரக்ஷித்து
வருகிறார்.
ஸ்ரீ நரசிம்ஹர் ஹிரண்யகசிபுவை வதம் செய்து சிங்கக்குட்டியான ப்ரஹ்லாதனுக்கு
ஸ்ரீ லக்ஷ்மிந்ருசிம்ஹராக  தரிசனம் கொடுத்து ஆசிர்வாதம் செய்து ப்ரஹலதானுக்கு முக்தி
கொடுத்தார் . ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹருக்கு தேங்காயில் நெய் தீபம்  ஹாரத்தி,
ஏலக்காயுடன் வெல்லம் சேர்த்து  செய்யப்படும் பானகம் ஆகியவை விசேஷம்.
இடது பக்கத்தில் ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி தாயார் அமர்ந்த திருகோலத்தில் உள்ளார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்
ஸ்ரீ ஹயக்ரீவர்  கல்விக்கு அதிபதியாக இருப்பவர். இவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம். ஒரு
சமயம் ப்ரம்மதேவனிடமிருந்து  ரிக்,யஜூர்,சாம,அதர்வண  வேதங்களை ஹயக்ரீவன் என்னும்
அசுரன் களவாடி சென்றான். வேதங்களைக் காக்க ப்ரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க
குதிரை முகத்தோடு ஹயக்ரீவன் அசுரனை வதம் செய்து வேதங்களை காத்தார். ஹயம் என்றால்
குதிரை. குதிரை முகத்தோடு அவதாரம் செய்ததால் ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு  "ஸ்ரீ ஹயக்கிரீவர்
என்ற பெயராகும். மற்றொரு சமயம் த்ரவ்யம் இல்லாமல்  கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஒருவருக்கு
தங்கத்தை கொடுத்தார்.எனவே கல்விக்காகவும் , பணம் தங்குவதற்காகவும்  ஸ்ரீ ஹயக்ரீவரை
வழிபடுவது சாலச்சிறந்தது. இவருக்கு ரசகன்டம் (சமஸ்க்ருதம்) அதாவது கற்கண்டு (தமிழ்),   
சனக ஹாரம்(சமஸ்க்ருதம்) அதாவது கொண்டைக்கடலை மாலை (தமிழ்) ,மற்றும் ஏலக்காய் 
மாலை ஆகியவை பிடிக்கும். அவரது வலது கை அபயஹஸ்தத்தையும்,இடது கை                
ஸ்ரீ லக்ஷ்மிதேவியை ( கமலவல்லி ) அரவனைத்தும் மேலிரு கரங்களில் பாஞ்சஜன்யம் என்னும்
சங்கையும் சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் பிடித்துள்ளார். அவருடைய நாசி அதாவது  மூக்கு
கல்வியை பயில்பவர்களின் கல்வியை முகர்ந்தபடியாக  இருக்கும்.
ஸ்ரீ ஹயக்ரீவர்
ஸ்ரீ ஆஞ்சநேயர் (ஸ்ரீ ஹனுமான் ) புத்தி, பலம் ,தைர்யம்,பயமில்லாமை, ஆகியவற்றை
அனைவருக்கும் கொடுக்கிறார் . இவர் சிறிய திருவடி என அழைக்கப்படுகிறார். இவரை
வழிபடுவோருக்கு குடும்ப உறவினர்களிடையே   சுமூகமான உறவு ஏற்படவும் , பலரது
நோய்களை தீர்ப்பவராகவும் இருக்கிறார். வாழைப்பழம் இவருக்கு பிடிக்கும் . மாஷா பூபஹாரம்
(சமஸ்க்ருதம்) அதாவது வடை மாலை சாற்றி வழிபட்டால் இவர் சகல சௌபாக்கியமும்  தருவார்.
வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சகல நோயும் உடனடியாக தீர்ந்துவிடும் என்பதில்
சிறிதேனும் ஐயமில்லை. சூரிய பகவானின் புத்ரியான ஸ்ரீ சுவர்சலா தாயாருடன் இருக்கிறார்.
இவருக்கு அவியல் பிரசாதம் பிடிக்கும். இந்த சந்நிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன்
நின்ற திருகோலத்தில் இருப்பது சோளிங்கர் ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு இணையாகும். பிற
விஷயங்களை நேரில் வந்து தெரிந்து கொள்ளவும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர்
Back
Next